மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 2 அன்று, காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.இது காந்தி போர்பந்தரில் பிறந்தது முதல் 'தேசத்தந்தை' எனப் போற்றப்படுவதுவரை, 150 தகவல்களின் தொகுப்பு!



1. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் பகுதியின் போர்பந்தரில், அக்டோபர் 02, 1869 அன்று பிறந்தார்.

2. அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி போர்பந்தர் பகுதியின் தலைமை அமைச்சராக இருந்தவர்.

3. காந்தி, அவரது வீட்டில் இறுதியாகப் பிறந்த குழந்தை. அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.

4. ராஜ்கோட்டில் மேல்நிலைக் கல்வி பயின்றபோது, காந்தி தன் சிறுவயதிலேயே நிச்சயிக்கப்பட்ட, கஸ்தூர்பாவை மணந்துகொண்டார்.

5. மோகன்தாஸ் காந்தியின் 16-வது வயதில், அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மரணமடைந்தார்.

Loaded9.02%

Remaining Time 9:55

Gandhi

Gandhi

6. தனது 19-வது வயதில், கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணப்பட்டார் காந்தி.

7. காந்தி முதன்முதலாகப் பகவத் கீதை புத்தகத்தைப் படித்தபோது, அவருக்கு வயது 20. பகவத் கீதை காந்தியின் மனதை ஈர்த்த புத்தகங்களுள் முதன்மையானது.

8. இங்கிலாந்து சென்று மூன்று ஆண்டுகள் கழித்து, இந்தியா திரும்பினார் காந்தி. பம்பாய் (மும்பை) உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற முயன்று, சிறிது காலம் சட்ட வரைவாளராகப் பணியாற்றினார்.

9. 1893-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் பயணப்பட்டார் காந்தி.

10. ரயில் பயணத்தின்போது, நிறம் காரணமாக அவமானப்படுத்தப்பட்டார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய நிறவெறிக்கு எதிராக, நாட்டல் இந்திய காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார்.

11. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதியின் உச்ச நீதிமன்றத்தில் பதிவுசெய்த முதல் இந்திய வழக்கறிஞர் காந்தி. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்தார்.

12. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் வாழ்விடங்கள், வர்த்தகம் ஆகியவற்றை மறுக்கும் சட்டங்களை எதிர்த்து, தொடர்ந்து தாதாபாய் நவ்ரோஜிக்குக் கடிதம் எழுதினார் காந்தி.

13. 1902-ம் ஆண்டு, மீண்டும் இந்தியா திரும்பிய காந்தி சில நாள்கள் கல்கத்தாவில் (கொல்கத்தா) கோகலேவுடன் தங்கினார். பிறகு, பம்பாய் நீதிமன்றத்தில் வழக்காடுவதைத் தொடங்கினார். எனினும், தென்னாப்பிரிக்காவில் அவர் தொடங்கிய பணி அவரை மீண்டும் அழைத்தது.

14. தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால் பகுதியில், ஆசியர்கள் தங்கள் கைரேகையைப் பதிவு செய்து, அடையாள அட்டை பெற்றால் மட்டுமே வாழ முடியும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. அதைக் கண்டித்து, டர்பன் நகரில் போராட்டம் நடத்தினார் காந்தி.

15. தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பெர்க் நகரில் ப்ளேக் நோய் பரவியபோது, 'ஆரோக்கியத்துக்கான வழிகாட்டி' என்ற தலைப்பில், தனது உணவுப்பழக்கம் குறித்து புத்தகம் எழுதினார் காந்தி.

Gandhi

Gandhi

Comments